மதுரை நீதிமன்ற மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக மணல் ஜல்லி உள்ளிட்ட கலவைகள் கொண்டு சாலையில் போடப்பட்டுள்ளது. ஆனால் கொட்டப்பட்ட ஜல்லி மற்றும் புழுதி மண்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகன ஓட்டிகள் வரை வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் முன்னாள் செல்லக்கூடிய வாகனங்கள் என்ன செல்கிறது என்பது கூட அறிய முடியாமல் முன்னே செல்கின்ற வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுகிறது. மேலும் இந்த தூசு காற்றானது சுவாசிப்பதால் சுவாச நோய்கள் மற்றும் மூச்சு தினார் ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். துரிதமாக சாலை அமைத்து பெரும் விபத்தை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.