• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

இன்று லோகேஷ்கனகராஜ்- விஜய் இணையும் தளபதி 67 பட பூஜை

ByA.Tamilselvan

Dec 5, 2022

லோகேஷ்கனகராஜ்- விஜய் இணையும் தளபதி 67 படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைப்பெற்றது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் 2019-ல் ‘மாஸ்டர்’ படத்திற்காக முதன்முறையாக இணைந்தனர். இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா வைரஸ் காரணமாக 2021-க்கு தள்ளிப்போனது. ஆயினும்கூட, ஆக்‌ஷன் நிறைந்த மாஸ்டர் படம் ரசிகர்களைக் கவர தவறவில்லை.இதையடுத்து மீண்டும் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைவதாகக் கூறப்பட்டது. பின்னர் லோகேஷ் கனகராஜும் பல தருணங்களில் தான், விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்தினார். இவர்கள் இணையும் படம் விஜய்யின் 67-வது படம் என்பதால், தளபதி 67 என அழைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் தளபதி 67 படத்தின் பூஜை நடைப்பெற்றுள்ளது. தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ரெட் டோனில் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடைப்பெறுகிறது.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் – லலித் கூட்டணி இணையும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.