• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வரும் திங்கட்கிழமை கடலூரில் உள்ளூர் விடுமுறை

Byமதி

Dec 17, 2021

உலக பிரசித்தி பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வரும் திங்கட்கிழமை 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக, கடலூர் மாவட்டத்தில் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மேலும், இந்த விடுமுறையை சரி செய்ய வரும் ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாக தெரிவித்துள்ளார்.