• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடி வீச்சு!!

ByVasanth Siddharthan

Jul 25, 2025

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் எக்ஸ்போ சிட்டி பகுதியில் வசிப்பவர் பாண்டியராஜன் (வயது 53) இவருக்கு திண்டுக்கல் -திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே கறிக்கடை உள்ளது. இந்த கறிக்கடையை பாண்டியராஜன் தனது உறவினர் நாகபாண்டி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். நாகபாண்டி கடந்த ஐந்து வருடங்களாக கடைக்கு வாடகை தொகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

எனவே கறிக்கடையை காலி செய்யுமாறு பாண்டியராஜன் நாகப்பாண்டியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை பாண்டியராஜன் காவல் நிலையத்தில் நாக பாண்டி மீது புகார் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று 24/7/2025 நள்ளிரவு 12.30 மணியளவில் பாண்டியராஜன் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது.

வெடி சத்தம் கேட்ட பகுதி உள்ளே சமைய‌லறை பக்கம் சென்று பார்த்த போது சமையல் அறையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து சமையலறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தபோது வீட்டின் கேட் முன் பகுதியில் ஒரு பெட்ரோல் ஊற்றி நாட்டு வெடியை வீசியதில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்துள்ளது,

அப்போது அங்கு எதிரில் நாக பாண்டி நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது ,

பாண்டியராஜன் சத்தம் போட்டதும் நாக பாண்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை காட்டி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாண்டியராஜன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசர் வழக்கு பதிவு செய்து நாகபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாண்டியராஜன் வீட்டில் பெட்ரோல் பயன்படுத்தி நாட்டு வெடி வீசும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.