• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குட்டி குஷ்புவுக்கு கல்யாணமா…??? வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை தான்…

Byகாயத்ரி

Aug 5, 2022

சிம்பு உடனான காதல் தோல்விக்கு பின்னர் படங்களில் பிசியாக நடித்து வந்த ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 2, சிம்புவுக்கு ஜோடியாக வாலு போன்ற படங்களில் நடித்தார். இவர் பார்ப்பதற்கு இளம் வயது குஷ்பு போன்றே இருந்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பு என்றும் அழைத்தனர். பின்னர் உடல் எடை கூடியதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கியது. இதன் பின்னர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த ஹன்சிகாவிற்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள் தெலுங்கில் 3 படங்கள் என அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. சமீபத்தில் இவரின் 50-வது படமான மஹா வெளியானது. இப்படத்தில் அவரது முன்னாள் காதலனான சிம்புவும் நடித்திருந்தார். ஆனால் இப்படமும் பிளாப் ஆனது. காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஓகே சொல்லிவிட்டாராம் ஹன்சிகா. அதன்படி அவருக்கு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.