• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சென்னை ‘கிங்ஸ்’ சர்வதேச பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப்போட்டி

Byஜெ.துரை

Mar 4, 2023

சென்னை சைதாப்பேட்டையில் கடந்த நான்கு வருடமாக செயல் பட்டு வரும் ‘கிங்ஸ்’சர்வதேச பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கு என்னென்ன தனித்திறமைகள் அவர்களிடம் உள்ளன என்று அதை வெளிக்கொண்டு வரும் விதமாக வாராவாரம் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றது.


அதில் குறிப்பாக பாட்டு போட்டி, நடன போட்டி, சமையல் போட்டி, மற்றும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் குழந்தைகள் தங்களை எந்த போட்டியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறது என்று ஆராய்ந்து அதில் அவர்களை இன்னும் திறம்பட செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரையும் தனித் தனியே அழைத்து குழந்தைகளின் தனித்திறமை பற்றி அவர்களிடம் எடுத்து கூறி அவர்களை இன்னும் ஊக்குவிக்க பள்ளியின் ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தபடுகிறது என்று பள்ளியின் நிர்வாக இயக்குனர் அமிர்தராஜ் ஜெமிமா நம்மிடம் கூறினார்.