• Thu. May 9th, 2024

இரட்டை இலை சின்னத்தை வைத்தவர்கள்.. பேனாச்சின்னத்தை குறை கூறுகிறார்கள்-அமைச்சர்-என்.கே..சாமிநாதன்

ByKalamegam Viswanathan

Mar 4, 2023

முன்னாள் முதல்வர் ஜெ நினைவிடத்தில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தை அரசு நிதியில் வைத்திருக்கின்றனர் இது குறித்து யாரும் பேசுவதும் இல்லை ஆனால் பேனாச்சின்னத்தை மட்டும் குறை கூறுகிறார்கள். பேனா என்பது பொதுவானது அது கட்சியின் சின்னம் கிடையாது ஆனால் இரட்டை இலை கட்சியின் சின்னம்.
செய்தித்துறை அமைச்சர்-என்.கே..சாமிநாதன்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 14-வது ப்ரக்கிரிதி சர்வதேச ஆவண திரைப்பட நிறைவு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது .
இந்த நிகழ்வை தேசிய கல்வி தொடர்பான கூட்டமைப்பு மற்றும் கல்வி பல் ஊடக ஆய்வு மையம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் விழாவானது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.இதில் சிறந்த ஆவண படங்களுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் சுவாமிநாதன் பரிசுகள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் கூறுகையில் சென்னையில் அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு சிலைகள் அமைக்க முதல்வர் ஒப்புதல் கொடுத்துள்ளார். அதன்படி விரைவில் இரு தலைவர்களின் சிலைகள் சென்னையில் அமைக்கப்பட உள்ளன மற்றும் சென்னை சுற்றியுள்ள சேதமடைந்த சிலைகளை சரி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைவர்களின் மணிமண்டபங்கள் அந்த மணிமண்டபங்கள் தலைவர்கள் பிறந்த நாள் , நினைவு நாள் மட்டுமே பயன்படுகிறது அந்த ஒரு நாட்களுக்கு மட்டும் பயன்படாமல் மற்ற அரசு விழாக்களுக்கும் மற்றும் பொதுமக்களின் சுப காரியங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அமைய உள்ளது. இதனால் தேசிய தலைவர்களின் பெயர்கள் அந்த ஒரு நாட்களுக்கு மட்டும் பயன்படாமல் இப்படி விழாக்கள் நடத்துவது மூலமாக அவர்கள் பெயர் நாள்தோறும் நம் நினைவில் இருக்கும்.
முதல்வரின் பத்திரிகைக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டு இந்த நல வாரியம் பயன்கள் பத்திரிகையாளர் மட்டுமில்லாமல் அவர்கள் குடும்பத்திற்கும் இந்த நல வாரியம் உதவும் என்று கூறினார்.செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க செல்லும் போது தொடர்ந்து தாக்கப்படுகின்றனர் குறித்த கேள்விக்குஅரசு கவனத்திற்கு வரக்கூடிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு அவர்களை பாதுகாக்கும்.ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் தான் ஜெயித்தது என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ள குறித்த கேள்விக்குதோல்வியற்றவர்கள் சொல்லும் கதை “குப்புர விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டலல” என்ற கதை தான்.கலைஞரின் பேனா சிலை தொடர்ந்து சர்ச்சை எழுப்பி கொண்டிருக்கிறது அது குறித்த கேள்விக்குஅதிமுகவின் சார்பில் இரட்டை இலை சின்னத்தை அரசு நிதியில் வைத்திருக்கின்றனர் இது குறித்து யாரும் பேசுவதும் இல்லை ஆனால் பேனாச்சின்னத்தை மட்டும் குறை கூறுகிறார்கள். பேனா என்பது பொதுவானது அது கட்சியின் சின்னம் கிடையாது ஆனால் இரட்டை இலை கட்சியின் சின்னம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *