• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Apr 15, 2023

நற்றிணைப் பாடல் 159:

அம்ம வாழி தோழி நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே

பாடியவர்: வெள்ளைக்குடிநாகனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

 அம்ம, தோழி கேள்.
நம்மிடத்தே இவையெல்லாம் எனக்குத் தென்படவில்லை. ஓங்கிய மலைநாடன் வரும் வழியில்தான் இந்த இடர்பாடுகள். அவன் இரவில் வருகிறான். கல்லுப் பாதை அவன் கால்களைக் கொல்லுகிறது. மிகுந்த இருட்டு அவன் கண்களைக் கொல்கிறது. குகையில் இருக்கும் புலி யானையைத் தாக்கி அதன் குருதியைப் பருகிவிட்டுத் தன் வாயை வேங்கை மரத்தில் துடைத்துக்கொள்கிறது.  எனக்கு அச்சமாக இருக்கிறது. இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.