• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

லைஃப்ஸ்டைல்

Byவிஷா

Mar 15, 2023

பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள்;:

நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை அள்ளி அள்ளி வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவையாகத் திகழ்கின்றன. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் பசலைக்கீரை.இந்த பசலைக்கீரையில் கிடைக்கும் எண்ணற்ற மருத்துவகுணங்கள் மற்றும் சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பசலைக்கீரை இருக்கிறது. இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும். அப்படியாக  இங்கு, அந்த பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 

பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும். பசலைக்கீரையில் விட்டமின் சி, வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள், சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
மலச்சிக்கல், தொந்தி சிறுநீர் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை படுதல் போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறப்பான மருத்துவ பொருளாகும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும். அதுமட்டுமின்றி, உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.
பசலைக்கீரையில் குறைந்த கலோரிகள் இருப்பதால் இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதேபோல் அதிக நியூட்ரியன்ஸ் மற்றும் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பும் இருப்பதால் சிறந்த பானமாக கருதப்படுகிறது.
பசலைக்கீரையில் இருக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. பசலைக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் இரத்தசோகையில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்று, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு பசலைக்கீரை ஒரு சிறப்பான உணவுப்பொருள் ஆகும்.
பசலைக்கீரையில் நிறைந்துள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகள் மற்றும் பற்களை வலிமைபடுத்த செய்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் கே எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்து எலும்புக்கு வலிமை அளிக்கிறது. உடலின் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.
பசலைக்கீரையில் இருக்கும் விட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்கள், சரும ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சி, முகப்பரு மற்றும் சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அளிக்கிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.