• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

லைஃப்ஸ்டைல்

Byவிஷா

Mar 3, 2023

ஆரோக்கியமாக வாழ காலையில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்:

காலையில் எழுந்தவுடன் நாம் கடைப்பிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் அந்த நாளை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அமைதியான மன நிலையை ஏற்படுத்தி பரபரப்பான வாழ்க்கை சூழலை சமாளிக்கவும் உதவும். அதற்கு நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்!

வளர்ந்து வரும் நாகரிகச் சூழலில், ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத ஒரு பொருளாகி விட்டது. ஸ்மார்ட்போன் இல்லாத வீ’டே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்தப் பொருளின் மீதான மோகம் பெருகி விட்டது. இரவில் தூங்கச் செல்லும்போதும், காலையில் கண் விழுத்த உடனேயும் செல்போனில் நேரத்தை செலவிடுபவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். காலையில் அலாரம் ஒலியின் சத்தம் கேட்டு சிரமப்பட்டு எழுபவர்கள் ஒரு மணி நேரமாவது செல்போனை ஒதுக்கி வைப்பது நல்லது.


சமூக ஊடகங்களின் தாக்கம் வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது என்றாலும் எழுந்ததும் காலை வேளையில் அதனை தவிர்ப்பது அமைதியான சூழலுக்கு வழிவகை செய்யும்.
காலை எழுந்ததும் சில நிமிடங்களை உங்களுக்காக செலவிடுவது மன உறுதிக்கு பயனுள்ளதாக இருக்கும். மனதுக்குப்பிடித்தமான இசையை கேட்பது மனதை அமைதிப்படுத்தும். இது மன அழுத்தத்தை குறைக்கும்.
அலுவலகத்திற்கு செல்ல நேரமாகி விட்டதே என்று அவசர அவசரமாக குளிக்கக்கூடாது. குளிப்பதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதனை சரிவர பின்பற்ற வேண்டும். அது மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ள உதவும்.
காலை வேளையில் தியானம் மேற்கொள்வதும் சிறப்பானது. தளர்வான நிலையில் உட்கார்ந்து சில நிமிடங்கள் தியானிப்பது தெளிவான மன நிலையை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி, தியானம், யோகாசனம் ஆகிய மூன்றுக்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் இன்றியமையாதது. மன அழுத்தத்திற்கு நடைப்பயிற்சி சிறந்த மருந்து இரவில் நன்றாக தூங்குவதற்கும் உதவி புரியும். காலை வேளையில் ஏதாவதொரு யோகாசனம் செய்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற் கும் பயனுள்ளதாக இருக்கும்.
காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போதே எந்த காரியத்தை முதலில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதனை முதலில் நிறைவேற்றிய பிறகே அடுத்த வேலைகளில் கவனம் பதிக்க வேண்டும். அவ்வாறு செய்வது மற்ற வேலைகள் காலதாமதம் ஆவதை தவிர்க்க உதவும்.
காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். காலை வேளையில் சத்தான உணவை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் வளர்சிதை மாற்றங்களை சீராக்கி உடல் நலம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு துணை புரியும்.
இவ்வாறான சில நல்ல பழக்கவழக்கங்களை அன்றாடம் கடைபிடித்து வந்தால் ஆரோக்கியமான நல்வாழ்வை நாம் வாழலாம்.