• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

லைஃப்ஸ்டைல்:

Byவிஷா

Jun 14, 2023

அதிக சத்துக்கள் நிறைந்த சாலட் :

தேவையான பொருட்கள்:

கேரட், தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2
வெள்ளரிக்காய் – 1
பச்சை மிளகாய் – 1
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு

செய்முறை:

முதலில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், கேரட், வெங்காயத்தை  சேர்த்து நன்கு  கலந்ததும், அதனுடன் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிது கிளறி சாப்பிடலாம்.  இதை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால்,  உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.