• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

லைஃப்ஸ்டைல்

Byவிஷா

Mar 23, 2023

வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:

பொதுவாக இஞ்சி நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது அதில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்களும் மருத்துவ குணமும் அடங்கியுள்ளது. இஞ்சி நம் உடலில் உள்ள பித்தம், கபம், வாயு போன்றவைகளை சம நிலையில் வைக்க உதவுகிறது. இதன் மூலம் நம் கல்லீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இந்த இஞ்சியை நாம் தேநீரில் கலந்து, வெல்லம் சேர்த்து குடிக்க நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
  1. பொதுவாக தேநீரில் சர்க்கரையை விட வெல்லம் சேர்ப்பது ஆரோக்கியமானது. தீங்கு செய்யாது.
  2. எனவே இதை தேநீர் அல்லது மோர் அல்லது நீங்கள் குடிக்கும் வேறு எந்த பானத்திலும் சேர்க்கவும்.
  3. தினம் காலையில் இஞ்சி டீயுடன் வெல்லம் சேர்த்து குடிப்பதால் பல உடல்நல பிரச்சனைகளை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் .
  4. இந்த வெல்லம் சேர்த்த இஞ்சி டீ, நம் உடலில் சேரும் தேவையில்லா நச்சுகளை வெளியேற்றும்
  5. இந்த நச்சுக்கள் நீண்ட நேரம் உடலில் இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே இவற்றை உடலில் இருந்து வெளியேற்ற இந்த தேனீர் பயன்படும் .
  6. மேலும் காலையில் ஒரு கப் வெல்லம் கலந்த டீ குடிப்பதால் ரத்தத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிநம் உடல் புத்துணர்வு பெரும்.