• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லைஃப்ஸ்டைல்

Byவிஷா

Feb 25, 2023

மூட்டு வலியைக் குறைக்கும் குடமிளகாய் கிரேவி:

குடமிளகாய் கிரேவி செய்யத் தேவையானப் பொருட்கள்-

நறுக்கிய குட மிளகாய் – 1 கப், நறுக்கிய வெங்காயம் – 1 கப், தக்காளி – 1 கப், மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 5, தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, கொத்த மல்லித்தழை – சிறிது.

செய்முறை-

முந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த் துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, குட மிளகாய் போட்டு வதக்கி, அரைத்த விழுது சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்து வந்ததும் கொத்த மல்லித் தழையை தூவி இறக்கவும்.