• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்.., 60க்கும் மேற்பட்டோர் கைது…

ByB.MATHIYALAGAN

Dec 19, 2023

கடலூர் மாவட்ட நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 92 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்ததை கண்டித்து, நெல்லிக்குப்பம் அண்ணாசிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறிவுடை நம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலும் நடைபெற்றது.
மேலும், போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன், நகர செயலாளர்கள் திருமாறன், புலிக்கொடியன். வழக்கறிஞர்கள் குருமூர்த்தி, தமிழ் ஒளி, மற்றும் முன்னனி நிர்வாகிகள் கணேசன், கல்வி செல்வன், ஸ்ரீதர், அம்பேத், மொய்தீன், சதாம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலை மறியல் தகவலறிந்து வந்த நெல்லிக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 59 பேர் கைது செய்தனர். இதில் மேல்பட்டாமத்தை சேர்ந்த விடுதலைக் கட்சியில் 14 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.