• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எம்ஜிஆர் வகுத்து தந்த பாதையில் பயணிப்போம்- இபிஎஸ்

ByA.Tamilselvan

Dec 24, 2022

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு “அவர் வகுத்து தந்தபாதையில் பயணிப்போம் என எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள், திரைத்துறையினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். அந்த பதிவில், ” வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி, எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி ” என்று குறிப்பிட்டிருந்தார்.