• Thu. Mar 28th, 2024

ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் திட்டத்தை
செயல்படுத்த விட மாட்டோம்: ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது யாத்திரை 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இன்று ராகுலின் பாதயாத்திரை தலைநகர் டெல்லிக்குள் நுழைந்துள்ளது. டெல்லிக்குள் பாதயாத்திரை நுழைவதற்கு முன்பாக டெல்லி எல்லையில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது; இந்த யாத்திரையில் இந்துஸ்தானும் அன்பும் நிறைந்து இருக்கிறது. ஜாதி, மதம், பணக்காரன், ஏழை என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்து செல்கிறது. ஆர்.எஸ்.எஸ்/ பாஜகவின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான். அனைவரும் அச்சத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இந்த அச்ச உணர்வை வெறுப்பாக மாற்றுகிறார்கள். ஆனால், நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். நாங்கள் அன்பை பரப்புகிறோம். அனைத்து இந்தியர்களையும் அரவணைத்து செல்கிறோம். 3 ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் நடந்து இருந்தால் நான் களைப்பு அடையவில்லை. இதற்கு நீங்கள் கொடுத்த அன்பும் புத்துணர்ச்சியுமே காரணம். அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா எங்களுக்கு உதவியிருக்கிறது. அதை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *