எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.. காவி இருக்கவேண்டிய இடத்தில் இருக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர்கே.ராஜூ அவேசம்.
திரு வள்ளுவர், அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காவிச்சாயமும், காவித் துண்டும் அணிவிக்கும் விஷமச் செயல் களில் இந்துமத வெறியார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை மீதும் காவித் துண்டு போர்த்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் பரவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, மதுரையில் எம்ஜிஆர் சிலை க்கு காவி கொடியை போட்டு அவமானப் படுத்தியவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். எம்ஜிஆர் சமூகநீதித் தலைவர். அவர் சிலை மீது காவிக்கொடி யை போட்டவர் இழிபிறவி. குற்றத்தில் ஈடுபட்ட வர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், எம்ஜிஆர் சிலைக்கு காவிக் கொடியை போட்டவர்கள் கைகளில் கிடைத்தால், அடி நொறுக்கிவிடுவோம்; காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.