• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எம்பி ஜோதிமணியை காணோம்: போஸ்டர் ஒட்டி தேடும் பொதுமக்கள்..

ByA.Tamilselvan

Nov 6, 2022

கரூர் எம்.பி.யை காணவில்லை என்று கரூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் சுவர்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.


அந்த போஸ்டரில் பயோடேட்டா மாடலில், பெயர்: ஜோதிமணி, பிடித்த இடம்: போலீஸ் வேன், பார்லிமெண்ட் கேண்டீன், வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம் செய்வது, பிடித்த பொழுதுபோக்கு: கலெக்டர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது, காளாண் பிரியாணி சமைப்பது. பிடித்தவர்கள்: அண்டோனியா மைனோ, ராவுல் வின்சி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, பிடிக்காத வார்த்தைகள்: தொகுதி நலன், மக்கள் வாக்குறுதி, ராமர்கோவில், பிடித்த நாடு: இத்தாலி, மறந்தது: தான் கரூர் தொகுதி எம்.பி. என்பதை…, காணாமல் போன தினம்: 23 மே (கரூர் எம்.பி.யாக பதவியேற்ற பின்பு) மேலும் பாராளுமன்ற கேண்டீனில் சலுகை விலை பஜ்ஜி, போண்டா சாப்பிட்டதை தவிர, இவரால் தொகுதிக்கு எந்தவித பயனும் இல்லை எனவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் கிடக்குழி மாரியம்மாள் பாடிய ‘கண்டா வரச்சொல்லுங்க… அவர கையோடு கூட்டி வாருங்க…’ என்ற பாடல் வரியும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.