• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

715 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,30,29,044ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 12597 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,358 ஆக உயா்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 1,316 பேர் குணமடைந்துள்ளனா்.

இதுவரை 4,24,95,089 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 2,84,073 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 184 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 3,14,823 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 79.10 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.