• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மீண்டும் வில்லனாகும் அருண் விஜய்!

மன்மத லீலை படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கவிருப்பதாக அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, அந்த படத்தில் வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அவருக்கு மார்க்கெட் அதிகமானது. அதைபோல் தற்போது தெலுங்கிலும் வலுவான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமாகலாம் என திட்டமிட்டுள்ளாராம்.

மேலும், அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.