நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலே வழக்கறிஞர் உட்பட இருவர் பலி, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் நிலக்கோட்டையில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் சாலையில் பர்ச்சுனர் காரும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் சமபவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சிவகாசி ஆனையூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜபிரபு(40), தனது காரில் மதுரை பேரையூர் சேர்ந்த 30 வயது கார்த்திக் உடன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி வழியாக, தங்களது காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ராஜபிரபு ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல தூத்துக்குடியில் இருந்து சுரேஷ் என்பவர் கண்டெய்னர் லாரியை தூத்துக்குடியிலிருந்து வத்தலக்குண்டை நோக்கி ஓட்டி வந்துள்ளார். இதில் சிலுக்குவார்பட்டி அருகே வழக்கறிஞர் காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மேலும் கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காரை இடித்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி நின்றது.
இதில் காரை ஓட்டி வந்த வழக்கறிஞர் ராஜபிரபு மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் இருவரையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்வுக்கூறுக்காக அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சாலையில் இருபுரங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்த சென்றது. இச்சம்பவமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.