விருதுநகர் நோபிள் கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பினை அயலகத்தமிழர்கள் மறுவாழ்வுத்துறை தனி வட்டாட்சியர் கார்த்திகேயினி துவக்கி வைத்து வாழ்த்துரையாற்றினார். திறன் மேம்பாட்டு பயிற்சியின் அவசியம் குறித்து நோபிள் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெரால்டு ஞானரத்தினம், விர்ஜின் இனிகோ உரையாற்றினர். சாய்ராம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வைரமுருகேசன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் சின்னக்கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.