• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒற்றை யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு கும்கியானைகள் வரவழைப்பு

சத்தியமங்கலம் காட்டுபகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை துரத்துவதற்கு கும்கியானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது ஆசனூர் வனச்சரகம். இங்கிருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. பயிரை காக்க இரவு நேரம் தோட்ட காவலுக்கு செல்லும் விவசாயிகளையும் துரத்துகின்றன. ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் யானைகள் முகாமிட்டு வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள், வாகன ஓட்டிகள் அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் முறையிட்டனர். இதையடுத்து வனத்துறையினர் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி, ராமு ஆகிய இரு கும்கி யானைகளை வரவழைத்துள்ளனர். இவை ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்த கும்கி யானைகள் ஒற்றை யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு தயாராக உள்ளன. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த கும்கி யானைகளை ஒற்றை யானை கிராமத்தில் புகும் வழித்தடத்தில் அழைத்து சென்றனர். தேவைப்படும் போது கும்கி யானைகளை கொண்டு மனித விலங்குகள் மோதலை தடுக்க ஒரு மாதம் ஆசனூரில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.