• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பேட்டி..,

BySeenu

May 27, 2026

கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது போன்ற வழக்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை ஐ.ஜி   அளவில் விசாரணை நடத்த வேண்டும்.

 சென்னையை போல கோவையிலும் மருத்துவ பரிசோதனை செய்ய டி.என்.ஏ .ஆய்வகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 4 மாதத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது. 

இதே போல் இந்த வழக்கிலும் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.