• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கல்விசீர் வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகள்

ByKalamegam Viswanathan

Mar 29, 2025

உசிலம்பட்டி அருகே தாங்கள் பயின்ற பள்ளிக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்விசீராக வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி ஆரம்பப்பள்ளி., இந்த பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் சூழலில் இன்று இப்பள்ளியின் 75வது ஆண்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த ஆண்டு விழாவின் போது இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்து சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பிரோ, டேபுள், சேர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கல்வி சீராக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கியது.

பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.,தொடர்ந்து பள்ளியின் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.