• Thu. Apr 25th, 2024

வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’

Byதன பாலன்

Jan 28, 2023

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இதுவரை தனித்தனி நபர்களாகத்தான் சினிமாவில் தங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஆனால் முதன்முறையாக நாளைய இயக்குனர் சீசன் 6 ரன்னர் அப்பின் மொத்த டீமும் இந்த குடிமகான் படத்தில் இணைந்து ஒன்றாகபணிபுரிகின்றனர்

விஜய் சிவன் அறிமுகக் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.

வழக்கமாக குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழையும்போது தாங்கள் இயக்கி வெற்றிபெற்ற குறும்படங்களையே முழுநீள திரைப்படமாக உருவாக்குவது வழக்கம். அதேபோல் இயக்குனர் பிரகாஷும் தனது ‘குட்டி தாதா’ குறும்படத்தையே திரைப்படமாக எடுக்கலாம் என முயற்சித்தபோது அதன் பட்ஜெட் பெரிய அளவில் இருந்ததால் முதலில் இந்த குடிமகான் படத்தை எடுப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார்

குடிமகான்படம் பற்றி இயக்குனர் பிரகாஷ் கூறும்போது,

“வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குடும்பபாங்கான படமாக இந்த ‘குடிமகான்’ உருவாகியுள்ளது. குடியை பற்றிய படம் என்றாலும் அதை தப்பாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையையும் குடிமகன் என்று சொல்வார்கள்..

குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், ‘குடிமகானாக’ இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது” என்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், பொன்ராம், அருண்ராஜா காமராஜ், க/பெ ரணசிங்கம் இயக்குநர் விருமாண்டி, அடங்காதே மற்றும் டீசல் படங்களின் இயக்குநர் சண்முகம், ‘விலங்கு’ வெப்சீரீஸ் இயக்குநர் பிரசாந்த் மற்றும் ட்விட்டர் இணையதளத்தில் நடிகர் நகுல் ஆகியோர் வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *