• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேர் கைது…

ByS.Ariyanayagam

Aug 27, 2026

திண்டுக்கல் அருகே பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசி எறிந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரை சேர்ந்த சைனி(40). இவர் தூங்கிக்கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ராபின்(29) என்பவர் எட்டி பார்த்ததாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராபின், சவேரியார் பாளையம், நேருஜி நகரை சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வகுமார்(26), அழகர்சாமி மகன் வெங்கிடுகிருஷ்ணன்(26) உள்ளிட்டோர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசி எறிந்தனர்.

இதுகுறித்து புறநகர்DSP.சங்கர் உத்தரவின்பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ராபின், வெங்கிடுகிருஷ்ணன், செல்வகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து மேலும் சிலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.