• Wed. Mar 26th, 2025

கோவிலுக்கு நன்கொடை வழங்கிய கே.டி.ராஜேந்திரபாலாஜி

ByK Kaliraj

Mar 3, 2025
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அம்மன் கோவில்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு 33 ஆம் ஆண்டு மாசி பொங்கல் திருவிழா வரும் 8-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இத்திருவிழாவில் அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், மற்றும் குத்துவிளக்கு பூஜை, உள்ளிட்ட நிகழ்ச்சிகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். முத்தாலம்மன் கோவில் மாசி திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அழைப்பு விடுத்தனர். மாசி திருவிழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்து, விழா கமிட்டியினருக்கு ரூபாய் 30,000 நன்கொடையாக வழங்கினார்.