

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க லயன் பேரிச்சம்பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு மாணவிகள் வளர் இளம் பருவத்தில் ஊட்டச்சத்து மிகவும் அவசியமாகும். ஆகையால் ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். பழங்கள், பேரிச்சம்பழங்கள், அதிகமாக உணவாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள், சிவகாசி திமுக நகர செயலாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



