

சர்வதேச சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த வீரர்,வீராங்கனைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை கடந்த ஆகஸ்ட்13அன்று நேரில் சந்தித்து ஆசி பெற்று… நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர்.

நேபாளில் நடைபெற்ற போட்டியில் வெற்றிவாகை சூடி மூன்று தங்க பதக்கங்கள் மற்றும் மூன்று வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த சிவகாசி சட்டமன்ற தொகுதியை சார்ந்த.வீரர் வீராங்கனைகள் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தனர். சிலம்ப்போட்டியில் R.ஔவைமாரியம்மாள், , L.மைக்கேல் அகஸ்டின் , T.விக்ணேஷ்வரன் ஆகியோர் தங்கப்பதக்கமும்,S.மணிகண்டன் ,A.ரெபினாவின்சி,E.பெரியசாமி ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
இந்நிகழ்வின்போது கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளரும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான M.S.R.ராஜவர்மன் , திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக செயலாளர். M.P.கிருஷ்ணமூர்த்தி , திருத்தங்கல் நகர வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்… N.M.ரமணா மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்…



