

பயணியர் வசதிக்காக, மைசூரு — பனாஜி இடையே நேற்று முதல் கே.எஸ்.ஆர்.டி.சி., ‘வேகதுாத்’ பஸ் போக்குவரத்து துவங்கியது.
இது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:கர்நாடகாவின் மைசூரு, கோவாவின் பனாஜி இடையே, நேற்று முதல் கே.எஸ்.ஆர்.டி.சி., வேகதுாத் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.மைசூரிலிருந்து – நாகமங்களா, ஹுளியார், ஹொசதுர்கா, ஹொல்கரே, தாவணகரே, ஹூப்பள்ளி வழியாக பனாஜியை அடையும்.
இந்த பஸ் இயங்குவதால் நாகமங்களா, மாயசந்திரா, துருவகரே, சிக்கநாயகனஹள்ளி, ஹுளியார், ஹொசதுர்கா, ஹொல்கரே பகுதிகளின் பயணியருக்கு உதவியாக இருக்கும். புதிய பஸ் போக்குவரத்தை, பயணியர் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
