• Fri. Apr 19th, 2024

தேனி அருகே கூடலூரில் கோவாக் ஷின் தடுப்பாட்டு: ஐயப்ப பக்தர்கள் யாத்திரைக்கு சிக்கல்

தேனி மாவட்டம் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவாக் ஷின் தடுப்பூசி இல்லாததால், பாதயாத்திரையாக சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால், தமிழம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வருபவர்களின் எண்ணிக்கையும் நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. இது போன்று பக்தர்கள் வருகையால் தேனி மாவட்டத்தில் முக்கிய ரோடுகள் வாகன நெரிசலில் சிக்கி மாட்டிக் கொள்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது.

பெரும்பாலான பாதயாத்திரை பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக வீரபாண்டி, கம்பம், கூடலூர் வழியாக லோயர் கேம்பை கடந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் இன்று (ஜன.2) காலை 8 மணிக்கு கூடலூர் வந்தடைந்தனர்.

கேரள அரசு கெடுபிடி, கொரோனா தொற்று காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக, பக்தர்கள் சிலர் கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு கோவாக் ஷின் தடுப்பூசி இல்லை என கூறி செவிலியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் நொந்து போன பக்தர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து, அரசியல் டுடே பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர். இது சம்பந்தமாக நமது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நமது தாழை நியூஸ்& மீடியா அரசியல் டுடே செய்தி நிறுவனம் செய்தியாளர்கள் மூலம் உடனே மாவட்ட கலெக்டர் முரளீதரனை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன், சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரி பக்கத்தில் இருப்பதாக கூறி, அவரிடம் இது சம்பந்தமாக கேட்டார். அதற்கு அவர், கோவாக் ஷின் தடுப்பூசி மருந்து பாட்டில் மூலம் ஒரே நேரத்தில் 20 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். 4 மணி நேரத்திற்கு மேல் இந்த மருந்தை பயன்படுத்த முடியாது. குறைந்த நபர்கள் இருந்ததால் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சம்பந்தப்பட்ட தடுப்பூசி இல்லை என, திருப்பி அனுப்பி இருக்கலாம். இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்ட ஐயப்ப பக்தர்கள், அதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றார். ஜனநாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்றான பத்திரிகைத் துறைகளும் பொறுப்போடு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. விழிப்புணர்வோடும் பொதுமக்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதை உணர்ந்து தேனி மாவட்ட நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் டுடேவின் ஆணித்தரமான கருத்தக பதிவு செய்கின்றது.


எது எப்படியோ, ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி மட்டுமல்லாமல் , பொதுமக்கள் நலன் கருதி கோவிஷுல்டு , கோவாக் ஷின் தடுப்பூசிகளை இல்லை என மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்(தடுப் பூசிகள்) இல்லை கூறாமல் தேனி மாவட்ட மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனிமேலாவது இருப்பு வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *