மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள அருள்மிகு கொம்புதூக்கி அய்யனார் கோயில் செல்லும் தார்ச்சாலை பழுதாகி புதிதாக தார்ச்சாலை அமைக்கும் வேலை தொடங்கி கற்கள் மட்டும் போட்டு சமபடுத்திய நிலையில் 6-மாதங்கள் கடந்தும் முழுமையாக தார்ச்சாலை அமைக்கவில்லை.

இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக்கூடிய பொருளை வாகனத்தில் கொண்டு செல்வதற்கும்,பொதுமக்கள் பயணிப்பதற்கும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
இது பற்றி கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் கொடுத்தும்,முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே விவசாயிகள் ,பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு முழுமையாக தார்ச்சாலை அமைத்து தருவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியரும்,தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!!






