• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துவமனையில் தொழுநோய் பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்துதொழுநோய் பாதிப்பு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குமதுரை மாவட்ட இணை இயக்குனர் (தொழுநோய்)விஜயன் தலைமை தாங்கி பயனாளிகளுக்குசேலை கைலி துண்டு மற்றும் உணவு உள்ளிட்ட உபகரண பொருட்கள் வழங்கினார்.அரசு தலைமை மருத்துவஅலுவலர் தனசேகரன், வட்டார மருத்துவர் அலுவலர் அஸ்வினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் ராஜரத்தினம், சந்திரசேகரன்,உடல் கூறு நல கல்வியாளர் முருகேஷ், முத்தையா, சிவனேசன், சீதாராமன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் குமார், சிவக்குமார், மோகன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில்வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.