• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Jul 9, 2026

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது இதில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். நாளுக்கு நாள் நிரந்தர பணியாளர்கள் குறைக்கப்பட்டு ஒப்பந்த பணியாளர்களை அதிக அளவு பணியில் அமர்த்த படுகிறார்கள்.

இந்த நிலை ஒப்பந்த நிறுவனமான அவர் லேண்ட் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இது ஆணையாளருக்கும் தெரியும் எனவும் இது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் பணியை மேற்கொண்டு வருவதாகவும் இவர்கள் தொழிலாளர்கள் சம்பளத்தை அதிக அளவு பிடித்தம் செய்வதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். மேலும் காலை 6 மணிக்கு எல்லாம் வந்து ரேகை வைக்க வேண்டும் அல்லது ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் அன்று அவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் எனவும் அதற்கு பதிலாக மாற்று ஊழியர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்படுவதில்லை.

இன்னும் மறுநாள் நாங்களே தான் அதே பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறதாகவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். மேலும் மக்கும் குப்பை மக்காத குப்பையை ஊழியர்கள் தான் பிரித்து வாகனத்தில் ஏற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகவும் கடந்த காலங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு டப்பாக்கள் தனித்தனியாக கொடுத்து பொதுமக்கள் கொடுத்து வந்தார்கள். ஆனால் தற்பொழுது அதை கொடுப்பதில்லை நாங்கள் பிரிப்பதாக இருந்தால் எங்கள் கைகளில் பிரிக்கும் பொழுது அதில் மலம் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய டைபர் மற்றும் நாப்கின்கள் உள்ளவை இருக்கின்றன.

எங்களால் அதில் பிரித்து எடுக்க முடியாத நிலை உள்ளது எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். மேலும் காலையில் உணவு திட்டம் என்பது மிக மிக மோசமான உணவு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் யாராவது அந்த உணவை சாப்பிடுவார்களா என கேள்வியும் எழுப்பினர். அதற்கு பதிலாக எங்களுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வரவு வைத்தால் போதும் எனவும் சாப்பாடு எங்களுக்கு வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என நேரடியாக தூய்மை பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பதே கோரிக்கையாகவே உள்ளது விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் நல சங்கம்
பூமிநாதன்..