• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வெளுத்து வாங்கிய விராட் கோலி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம்

ByP.Kavitha Kumar

Mar 6, 2025

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரன்மிஷின் விராட் கோலி 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டிகள் பாகிஸ்தான், துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அரையிறுதி ஆட்டப்போட்டியில் 84 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 747 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால், அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 2 இடங்களை இழந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் அதிரடி பேஸ்ட்மேன் ஷுப்மன் கில் 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலிக்கும், கில்லுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 44 ஆக உள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் ஹன்ரிச் கிளாசன் ஒரு இடம் முன்னேறி 760 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அஸம் 770 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறார்.

இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர் 702 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் ஸத்ரன் 13 இடங்கள் முன்னேறி 676 புள்ளிகளுடன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளார்.