• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு, சாரல் மழையுடன் குளு குளு சீதோஷ்ணம்

Byதரணி

May 12, 2024

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சாலையில் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது.