• Thu. Apr 25th, 2024

இ.பி.எஸ்.க்கு எதிராக பேசிய கே.எம்.பஷீர் கட்சியில் இருந்து நீக்கம்..!

Byவிஷா

Oct 28, 2021

அ.தி.மு.க.வில் சசிகலாவை இணைப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என அதிமுக சிறுபான்மையினர் அணி இணைச் செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் பேட்டியை கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அதிமுக தலைமை அவரை நீக்கியிருப்பது, அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜே.எம்.பஷீர், சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட்டப் பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்தபோது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை எடப்பாடி பழனிச்சாமி வற்புறுத்தினார்.
எடப்பாடி பழனிச்சாமி எனும் தனிமனிதன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக முகம்மது ஜான் வாக்களித்தார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூட சொல்லவில்லை. இன்றைக்கு வந்த திமுக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான். இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று குற்றம் சாட்டினார்.


செய்தியாளர்களை பஷீர் சந்தித்துக் கொண்டிருந்தபோது அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார், எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் பஷீர் பேசிய அதே நேரத்தில், கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார் பஷீர். இதையடுத்து. நீக்கம் குறித்து தனக்கு கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *