• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ரூ50 காக நண்பனை கொலை!!

BySeenu

May 31, 2025

கோவை, காந்திபுரத்தில் கட்டிடத் தொழிலாளி செங்கலால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி தனது நண்பர்கள் சரவணன் மற்றும் ஸ்டீபன் ஆகியோருடன் ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் பாருக்கு சென்று மது குடித்தார் அங்கு இருந்து ஜி.பி சிக்னல் பகுதியில் சென்றனர். அப்பொழுது சரவணன் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 பணத்தை தினேஷ் எடுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

ஆத்திரம் அடைந்த சரவணன், தினேஷை கீழே தள்ளி தலையில் செங்கலால் போட்டு கொலை செய்தார். மறுநாள் தகவல் அறிந்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஸ்டீபனை பிடித்து விசாரித்தனர். அப்பொழுது சரவணன் கொலை செய்ததாக தெரிவித்தார். தலைமறைவான சரவணன் கைது செய்ய மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு போலீசார் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணன் தேடி வந்த நிலையில், அவர் கரும்புக்கடை பகுதியில் இருப்பதை தெரிந்து. அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.