• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

என்னை கொன்று விடுங்கள் – ஸ்வப்னா சுரேஷ்

ByA.Tamilselvan

Jun 12, 2022

கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டும் ஸ்வப்னா சுரேஷ் என்னை கொன்று விடுங்கள் என ஆவேசமாகபேட்டியளித்துள்ளார்.
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுர்களுக்கு தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து, முதல் மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை விமர்சித்து முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக வக்கீல் கிருஷ்ணராஜ் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாலக்காட்டில் உள்ள தனது வீட்டில் வைத்து ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களைக் குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சரித்குமாரை போலீஸ் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என்று ஷாஜ் கிரண் கூறினார். அதேபோல நடந்தது. என்னுடைய வக்கீல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்றார். அதுவும் நடந்துள்ளது. என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னைக் கொன்று விடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என தெரிவித்தார்.