மதுரையில் போலி மதுரை மாநகராட்சி அடையாள அட்டையை சட்டவிரோதமாக பயன்படுத்தும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள்
மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் அருகே அமையும் வணிக வளாகம் அமைக்க பள்ளம் தோண்டும் போது வெளியான மண்ணை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி.மற்றும் தமுக்கம் மைதானம் மற்றும் தல்லாகுளம் போன்ற இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
கனிம வளத்துறை அனுமதியோடு ஒப்பந்தம் விடப்பட்டு மண் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மீறி தனியார் மாநகராட்சி ஒப்பந்த நிறுவனத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 டிப்பர் லாரிகளில் சேமித்து வைக்கப்பட்ட மண்ணை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் வாகனங்களை மடக்கி பிடித்து லாரிகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது அங்கு வந்த முகமது நசீர் என்பவர் தான் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எனவும் உரிய அனுமதியோடு மாநகராட்சி பணிக்காக மண் எடுத்து செல்வதாக தெரிவித்தார். அப்போது அவரது அடையாள அட்டையை சோதனை செய்தபோது மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் அரசு அடையாள அட்டையை முகம்மது நசீர் போலியாக தயாரித்து வைத்தது தெரியவந்தது. மேலும் அந்த அடையாள அட்டையில் தனியார் ஒப்பந்த நிறுவன பெயர் இடம்பெற்றுள்ள நிலையில் மாநகராட்சி நகர பொறியாளர் அகிலத்தில் அச்சு அசலாக பொறிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் நகர் பொறியாளர் அரசு தற்சமயம் கோயம்பத்தூர் இடம்பெயர்ந்து உள்ளார் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மாநகராட்சி தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு இப்படி ஒரு அடையாள அட்டை வழங்கப்படுகிறதா அதில் உங்கள் கையெழுத்து உள்ளதே என்ற கேள்விக்கு அது என்னுடைய கையெழுத்து இல்லை என்னுடைய கையெழுத்து போன்று போட்டுள்ளார்கள்.
இது கண்டனத்துக்குரியது சட்டத்திற்கு விரோதமானது சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நான் உரிய முயற்சி மேற்கொள்வேன் தெரிவித்திருக்கிறார். அவரே இது ஒரு போலியான அடையாள அட்டை இடவும் தெரிவித்ததை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அள்ளப்படும் மணல் விலை தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது என்ற வழக்கும் நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் இதுபோன்ற அரசின் அடையாள அட்டையை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபடும் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம்போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மும்வடிவுக்கு ஒரு மாதத்தில் ஒன்றிய […]
- இயற்கையின் படைப்பில் மேகமலை … கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ…தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது இயற்கை […]
- ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் […]
- உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பா?பரபரப்பு தகவல்
- என்.ஆர்.காங்-பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் திரெளபதி முர்மு ஆதரவு திரட்டினார்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் […]
- எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும்எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் என மதுரையில் எல்ஐசி ஊழியர் சங்க மாநாட்டில் […]
- இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றதுதேனி மாவட்டம் […]
- திருக்குறள்குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின் பொருள் (மு.வ): தமக்குப் பின் […]
- படித்ததில் பிடித்ததுஇருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி..வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..உலகம் […]
- பொது அறிவு வினா-விடைஉலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 […]
- கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள்கடந்த 10ஆண்டுகளில் 80காவல்நிலைய மரண வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு உள்ளதால் […]
- சோமேட்டோவிலிருந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த அனிரூத்..தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளியான […]
- கோயம்பேடு இல்லை… கிளாம்பாக்கம் வாங்க…சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெருக்கடியை குறைக்க வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் […]
- ஓபிஎஸ் தொண்டர்கள் அதிரடி- அதிர்ச்சியில் இபிஎஸ்சேலத்தில் ஓபிஎஸ் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு இருப்பதாக தகவல்அதிமுகவில் ஒற்றை தலைமை […]
- மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்கரூரில் நடைபெற்ற நிகழச்சியில் மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகரூரில் நடைபெற்ற […]