• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி..,

ByG.Suresh

Apr 15, 2025

சிவகங்கை மாவட்ட கிக்பாக்ஸிங் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் -2025ற்கான மாவட்டப் போட்டி வெகு விமர்சையாக ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சதீஷ் மற்றும் பொதுச்செயலாளர் ச. குணசீலன் தலைமையில் நடைபெற்றது,

இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. ராமேஷ்கண்ணன் மற்றும் சிவகங்கை நகர் காவல் நிலைய கண்கானிப்பளர் திரு அன்னராஜ் மேலும் மாவட்ட உடற்கல்வி கண்காணிப்பாளர் திரு கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தனர், 150ற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாயிண்ட் ஃபயிட்,லைட் காண்டாக்ட், கிக் லைட், எனும் போட்டியில் பல்வேறு எடை பிரிவுகளில் இப்போட்டியில் பங்கேற்றனர், இதில் தங்க பதக்கம் வென்ற வீரர்கள் மட்டும் மாநில அளவிலான கிகிபாக்ஸிங் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்,

மேலும் இந்த நிகழ்வில் 2024இல் தேசிய போட்டியில் சாதனை புரிந்த வீரர்களுக்கு Form-2 என்கிற உயர் கல்விகக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் பயன்பட கூடிய உயரிய சான்றிதலும் வழங்கப்பட்டது,மேலும் போட்டியில் நடுவர்களாக தேசிய அளவில் தகுதி பெற்ற தமிழ்நாடு கிக்பாக்ஸிங் சங்க நடுவர்கள் திரு. சந்துரு, திரு. துரைமுருகன், திருமதி.சித்ரா மற்றும் செயலாளர் கண்கானிப்பில் இப்போட்டி நடைபெற்றது,இதில் சிவகங்கையில் இருந்து 22 வீரர் மற்றும் வீராங்கனையினர் மாநில கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர், இந்த கிக்பாக்ஸிங் விளையாட்டு போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது