• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி..,

ByKalamegam Viswanathan

Nov 30, 2025

தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாலின் 48 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் இளைஞரணி சார்பில் நூறாவது வார்டில் மாநில அளவிலான கபடி போட்டியில் நடைபெற்றது கபடி போட்டிக்கு நூறாவது வார்டு செயலாளர் நேதாஜி ஆறுமுகம் இளைஞரணி செயலாளர் வில்வமணி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
சிறப்பு விருந்தினராக பொதுக்குழு உறுப்பினர் எஸ் ஆர் கோபி பகுதி செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல் பரிசாக 45 ஆயிரம் பணம், கோப்பையும், 2வது பரிசாக 35 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையும், 3வது பரிசாக 25 ஆயிரம் பணம் ,கோப்பை, 4வது பரிசாக ரூபாய் 15 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

மேலும் ஆறுதல் பரிசாக நான்கு அணிக்கும் வழங்கப்பட்டது முதல் பரிசை அவனியாபுரம் தனஞ்செயம் அணியினர் வெற்றி பெற்று 45 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையை கைப்பற்றினர். இரண்டாவது பரிசாக போஸ் நினைவு கபடி குழுவினர்35 ஆயிரம் பணம் மற்றும் கோப்பைகளையும் மூன்றாவது பரிசாக hp காலனி அணி 25 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையை கைப்பற்றியது . 4வது பரிசாக நேதாஜி கபாடி குழு ரூபாய்15 ஆயிரம் மற்றும் கோப்பை வென்றது.

மேலும் ஆறுதல் பரிசாக நான்கு கபடி குழுவினருக்கு தல 8,000 ரூபாய் கோப்பை வழங்கப்பட்டது.