• Mon. Oct 7th, 2024

நான் நோயாளியல்ல கேலி செய்தவர்களுக்கு குஷ்பூ பதிலடி

நடிகை குஷ்பு உடல் எடையை 20 கிலோ குறைத்து ஒல்லியாக மாறிய புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி 2-ம் பாகத்தில் நடிக்கும் அளவுக்கு அழகாக மாறி இருப்பதாக பாராட்டினர். இன்னும் சிலர் குஷ்புவின் மெலிந்த தோற்றத்தை பார்த்து உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டு கேலியும் செய்தனர்.


கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்பு ஏற்கனவே குண்டாக இருந்த தனது பழைய புகைப்படத்தையும், உடல் மெலிந்த இப்போதைய புகைப்படத்தையும் இணைத்து டுவிட்டரில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நான் 20 கிலோ எடை குறைத்து இப்படி மாறி இருக்கிறேன். மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். நீங்களும் உங்கள் உடல்நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.


ஆரோக்கியமே செல்வம். என் உடல் எடை குறைப்பை பார்த்த சிலர் எனக்கு உடல்நலம் சரியில்லையா என்று கேட்டுள்ளனர். அவர்களின் அக்கறைக்கு நன்றி. என்னை இதற்கு முன்பு இதுபோன்று பார்த்தது இல்லை. அவ்வளவு பிட்டாக உணர்கிறேன். என்னை பார்த்து உங்களில் 10 பேராவது உடல் எடையை குறைக்க முன்வந்தால் அது எனக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *