• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப்பில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த்ப் கெஜ்ரிவால்

Byமதி

Dec 2, 2021

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் என்னென்ன செய்வோம் என வாக்குறுதிகளை அடுக்கியுள்ளார்.

பஞ்சாப்பில் அடுத்தாண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்காக பஞ்சாப்பில் அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று நடந்த பிரசாரத்தில் ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய ராணுவத்தில் அதிகளவு பாதுகாப்பு வீரர்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள். அதேபோல், போர்களில் அதிக வீரர்கள் வீரமரணம் அடைந்ததும் இந்த பகுதியில் தான்.

கடந்த ஆண்டு மெலனியா டிரம்ப் டில்லி வந்திருந்தபோது, டில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வையிட விரும்பினார். டில்லி அரசு பள்ளிகள் அமெரிக்காவிலும் பிரபலமாக உள்ளன. பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, லண்டனில் இருந்தும் மக்கள் பஞ்சாப்பில் உள்ள அரசு பள்ளிகளை பார்க்க வருவர். நான் உங்களிடம் இரு வாக்குறுதிகளை அளிக்கிறேன். ஆம்ஆத்மி ஆட்சி அமைத்ததும், பஞ்சாப்பில் அதிகளவு அரசுப் பள்ளிகள் கட்டப்படும். டில்லியை சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லையில் வீரமரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்குவது போல், பஞ்சாப் ராணுவத்தினர் எல்லையில் வீரமரணம் அடைந்தாலும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.