• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!..

Byமதி

Oct 12, 2021 ,

விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இவர் நடிக்கும் 66 ஆவது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது.

அது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்துள்ளர்.