தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் பிசியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இவர் நடித்த சர்காரு வாரி பட்டா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து சிரஞ்சீவியுடன் போலா சங்கர், நானி உடன் தசரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் அனைத்தும் ப்ளாப் ஆனதால் மார்க்கெட்டும் சரியத் தொடங்கியுள்ளது. இதனால் சுதாரித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், தங்கச்சி ரோலிலும் நடிக்கத் தயார் என சொல்லி உள்ளார். அந்த வகையில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்த இவர், அடுத்ததாக தெலுங்கில் தயாராகும் போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார். படங்கள் ஹிட்டாகுதோ, இல்லை பிளாப் ஆகுதோ என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கீர்த்தி சுரேஷ், பிசியான நடிகையாக வலம் வர வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. முந்தைய படங்களை விட சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்காரு வாரி பட்டா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் உதடுகள் வித்தியாசமாக உள்ளதை நோட் பண்ணிய ரசிகர்கள், அவர் உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது போல் உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பு எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.