• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்

Byகாயத்ரி

May 20, 2022

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது.

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பெற்றது.மேலும் ரஜினிகாந்தின் தொழில் வாழ்க்கையின் சிறந்த நடிப்பில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மணிச்சித்திரதாழு படத்தின் ரீமேக் இது. இதன் தொடர்ச்சியில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் இரண்டாம் பக்கத்தில் நடிக்கவுள்ளார். சந்திரமுகி இயக்குனர்பி.வாசு இந்த பதத்தின் படப்பிடிப்பை கடந்த 2020-ம் ஆண்டே துவங்கி 2021-ல் திரையிடுவார் என யூகங்கள் கிளப்பப்பட்டன. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த படத்தில் அனுஸ்கா ஷெட்டி நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கான போஸ்டர்களையும் ரசிகர்கள் உருவாக்கி விட்டனர்.

இந்நிலையில் சந்திரமுகி 2 வை தயாரிப்பதாக இருந்த சன் பிக்சர்ஸ் பின் வாங்கியதால் தான் படப்பிடிப்பு துவங்கவில்லையாம். இதையடுத்து லைகாவுடன் ஒப்பந்தமான பி.வாசு தற்போது மீண்டும் திரை கதையை துவங்கியுள்ளாராம். எனவே விரைவில் இப்படம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.