• Tue. Mar 21st, 2023

ஏர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி

ByA.Tamilselvan

Mar 13, 2023

புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கத்தில் இடம்பெற்ற நாட்டு..நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருதுகிடைத்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது. பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது வென்றார். விருதுவென்ற இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே நன்றி தெரிவித்தார். மேலும் ஆர்ஆர்ஆர் இந்தியாவின் பெருமை என்றும் குறிப்பிட்டார். 2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான “ஜெய்ஹோ” சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *