• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பேரழகா..,

என் இதயத்தோடு வளர்கிறது உனது நியாபகங்கள்என் வாழ்க்கையின் வரமும் சாபமுமாய்

என் இதயத்தோடு வளர்கிறது
உனது நியாபகங்கள்
என் வாழ்க்கையின் வரமும்
சாபமுமாய்


எனது வாழ்நாள் முழுதும் தொடர்ந்திடும் உன் நியாபகங்கள்
எனது நேசத்தின்
மெய்யோடு


ஆறாத காயமும் நீதான்
ஆற்றும் அருமருந்தும் நீதான்


உள்ளங்களின் இளைப்பாறுதல்
சற்று சிரமம் தான்
இசை மட்டும் இங்கு இல்லையெனில் என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்